பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உலக வரலாற்றில்



அன்வரால் நியமிக்கப்பட்ட சுல்தானின் புரட்சிக்காரர்கள், கடமை தவறி நடப்பனவற்றை எல்லாம் முஸ்தபா உணர்ந்தார். இதே எண்ணத்தை, கமால் நண்பர்களாக உள்ள புரட்சிக்காரர்களும் தெரிந்திருந்தார்கள். இதனால், அன்வருக்கும் முஸ்தபாவுக்கும் அடிக்கடி ஆலோசனைக் கலவரம் ஏற்பட்டு, மனத்தாங்கல்கள் மலையென உருவெடுத்து, கசப்பும் கண்டனமும் தலைதூக்கிய படியே இருந்தது.

அந்த நேரத்தில் அதாவது 1911-ம் ஆண்டில், அக்டோபர் மாதத்தின்போது, இத்தாலி நாடு, துருக்கியின் பக்கத்து முஸ்லிம் நாடான திரிப்போலியை காரணம் ஏதுமின்றிப் படைபலத்தால் பிடித்தது.

இந்த ஆக்ரமிப்பைக் கண்ட துருக்கி, அண்டை நாட்டுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியதால், அன்வர் தலைமையில் படை ஒன்று புறப்பட்டது.

அந்தப் போரில் அன்வர் முஸ்தபாவுக்கு வழங்கவேண்டிய மரியாதையை, பொறுப்பைக் கொடுக்காமல், படைத்தலைவனாக முஸ்தபா இருக்கும்போது அன்வரே படைத்தளபதியாக மாறி, துருக்கிப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றது முஸ்தபாவுக்கு பெருத்த அவமானமாகப்பட்டது.

இதனால், அன்வரும் முஸ்தபாவும் பகிரங்கமாக, நேரிடையாகவே மோத ஆரம்பித்தார்கள். ஆனால்,