பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

69


இவர்கள் இருவருக்கும் இடையே சிலர் செய்ய முயன்ற சமாதான முயற்சி தோற்றது.

திரிப்போலியில், இத்தாலிக்கும்-துருக்கிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது தனது மனக்குறைக்கு மதிப்பளிக்காமல், முஸ்தபா துருக்கிப் படைக்குத் தளபதியாக இருந்து போர் நடத்தினார். ஆனால், போரில் சமாதான நிலைதான் ஏற்பட்டது. அதனால், துருக்கியைச் சுற்றிலும் பகைவர்களின் ஆதிக்கம் அதிகமானது. அதைக் கண்ட ரஷ்யர்களும், ஆங்கிலலேயர்களும் துருக்கியைப் பிடிக்க அவரவர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்வர் ஜெர்மன் நாட்டின் உதவியை நாடினார். அதன் உதவியால் சிதறிய தனது துருக்கிப் படையை ஒழுங்குபடுத்தினார். இந்தச் சீரமைப்புப் பணி ஜெர்மன் படைத்தளபதி லிமான் வான் திட்டப்படி நடந்தது. காரணம் அவர்தான் திரிபோலி போரின்போது துருக்கிப் படைக்குரிய ஆலோசகராக இருந்தார்.

இரஷ்சியர்களையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நடைபெற்ற அந்தக் கடுமையான சண்டையில், முஸ்தபா கமால் மிகப்போர்த் தந்திர யூகங்களோடு வியூகங்களை அமைத்துப் போரிட்டதால், அவரது வீரத்தின் விளைவுகளை மக்கள் கண்டார்கள் கமால் போராற்றலை பெரும் வியப்போடு பாராட்டி மகிழ்ந்தார்கள்.

துருக்கி மக்களிடையே இந்த முஸ்தபாகமால் பெருமை, புகழ் அதிகமாக ஆக, அன்வருக்கு அழுக்காறு ஏற்பட்டது.