பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

உலக வரலாற்றில்


அதனால், கமால் புகழைக் கெடுக்க அவதூறுகளையும், பழிகளையும் முஸ்தபாமீது பரப்பினான்.

துருக்கி சுல்தானை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்டு ஒரு முறை முஸ்தபா கமாலை அன்வர் பதவியைவிட்டு இறக்கிவிட்டார்.

சுல்தானுக்கு அதனால் உள்நாட்டு மக்களது எதிர்ப்பு வலுத்தது கலகங்கள் பரவலாக உருவாகின. அப்போது முஸ்தபா பிரிட்டன் படையுடன் போரிட்டு விரட்டியடித்தார். இதனால் துருக்கி சுல்தான் இருந்த இடம் தெரியாமல் எங்கோ தலைமறைவாகினார்.

புதிய பாராளுமன்றத்தை துருக்கி மக்கள் உருவாக்கினார்கள். அதன் தலைவராக முஸ்தபா கமால் ஆக்கப்பட்டார்.

இதனால் துருக்கி நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டன. மக்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியாத துருக்கி துரோகிகள் கிரேக்க நாட்டுக்கு ஓடினார்கள். அங்கே ஓடிய அவர்கள் கிரேக்கர்களைத் தூண்டிவிட்டு துருக்கியைத் தாக்குமாறு கூறினார்கள்.

1922-ம் ஆண்டு துருக்கியை எதிர்த்து, துரோகிகள் படைகளும் கிரேக்கப் படைகளுடன் சேர்ந்து கொண்டு போராடின. ஆனால், கமால் ஓய்ந்து விடாமல், முன்பைவிடப் பலமாக, பயங்கரமாகக் கிரேக்கப் படைகளையும், துரோகப் படைகளையும் தாக்கிப் போராடினார். அதனால் எல்லாப் படைகளும்