பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உலக வரலாற்றில்


சாதனைகளைப் படைத்த முஸ்தபா கமால் பாஷா 1938-ம் ஆண்டு நவம்பர் 31-ஆம் நாள் மறைந்தார். அவருடைய ஆட்சியில் துருக்கிநாடு சொர்க்க பூமியாக மாறி வளம் பெற்றது.


“எஜமானன் நூ’’
பர்மா முதல் பிரதமர் ஆனார்!

பர்மா மொழியில் ‘தக்கின்’ என்றால் ‘எஜமானன்’ என்று பொருள்! இந்தப் பட்டத்தைப் பர்மா இளைஞர்களும் பள்ளி மாணவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு, பர்மா நாட்டின் பட்டி தொட்டிகள், நகரங்கள் உட்பட்ட பல இடங்களில் கோலாகலமாக ஊர்வலம் வந்தார்கள்.

‘தக்கின்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் எல்லாம், பர்மா நாட்டுக்கும், மொழிக்கும் தங்களது உயிரையும் கொடுக்கத் தயாரான தேசபக்தர் படையிலே, சுதந்திர அணிகளிலே பக்தி பெற்றவர்களாவர்.

அதன் அறிகுறியாகத்தான் பர்மிய மக்கள் அந்த நாட்டிலே ஒரு பெரும் புரட்சியை உருவாக்கிய படைகளுடன் நாட்டுப் பற்றோடு இரண்டறக் கலந்து, எதற்கும், அஞ்சாத விடுதலை வீரர்களாகப் பணியாற்றினார்கள்.