பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6

உலக வரலாற்றில்



ஆனாலும், நமக்கு பிரதமராக இருந்த பண்டிதர் நேரு அவர்கள் தலைமையில் அமைந்த பாரத குடியரசு, வங்கம் தந்தவிடுதலைச்சிங்கம் நேதாஜியின் வீரமிக்கவிடுதலைப் போராட்டத்தை இந்திய சுதந்திரப்போராட்டமாகவே ஏற்று அவருக்குபெருமையும் புகழையும் மதிப்பையும் வழங்கப் பின்வாங்கவில்லை.

எந்த வழியிலே நின்று நோதாஜி போராடிஇருந்தாலும் அவருடைய மனத்தில் குமுறி நின்ற இலட்சியம், குறிக்கோள், இந்திய சுதந்திரம் என்ற ஒன்றே தான்.

எனவே நேதாஜியும், காந்தியவழியில் விடுதலைக்காகப் போராடியவர் என்றுதான் பாரதமக்கள் கொண்டாடுகிறார்கள்.இந்த மக்கள் நோக்கத்தை அறிந்த நேருஜி அரசு, நேதாஜிக்குரிய நன்றி உணர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது.

வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெற்றோர்கள் ஜானகி நாத் போஸ், பிரபாவதி ஆகியோருக்கு ஒன்பதாவது புதல்வராகப் பிறந்தார்.

கட்டாக் நகரில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் சுபாஷ் கல்வி கற்றார். அந்தப் பள்ளியில் ஆங்கிலேய மாணவர்களே அதிகமாக படித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பள்ளியில் போஸ் ஆறு ஆண்டுகள் கல்வி கற்றபின்னர் ராவென்ஷா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தார். அதற்குப் பிறகு வங்காளத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து ஆனர்ட்ஸ் பட்டம் பெற்று முதல் மாணவராகத் திகழ்ந்தார். பிறகு இங்கிலாந்து