பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

79



பர்மா தேசிய விடுதலை பெற்ற ஓரிரு மாதங்களில் பர்மாவிலே ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது, 1947-ம் ஆண்டில் அப்போது பாசிசஎதிர்ப்புமுன்னணி ஆட்சிக்குப் பிரதமராக இருந்த 'ஊ அவுங்சானும், அவருடைய அமைச்சரவைக் குழுவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்களும் எதிரிகளால் பாராளுமன்றத்திலேயே படுகொலையானார்கள். இது மக்கள் இடையே பெரிய நட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கிவிட்டது.

அப்போது இருந்த பர்மிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, 1948- ஜனவரி 4-ம் தேதியன்று ‘நூ’ பிரதமரானார் பர்மாநாடு குடியரசு நாடானது.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் ஆசையால் வளமிழந்திருந்த பர்மாநாடு, குடியரசு நாடாக மாறியதும், ‘நூ’ அந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிவிட்டார். நிலச் சீர்திருத்தங்களாலும், பிற விவசாயப் பணிகளாலும், பர்மா விவசாயிகள் வளமாகவும், நலமாகவும், சுதந்திர உரிமையோடும் வாழலானார்கள்.

தொழில்களை ‘நூ’ தேசியமயமாக்கினார்! லஞ்ச லாவண்ய கொள்ளையர்களைத் திருத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தார். புதிய தொழிற்சாலைகள் பல அமைத்து தொழில் வளத்தைப் பெருக்கிக் காட்டினார்!

பர்மாவின் உள்நாட்டிலும், அயல்நாடுகளில் இருந்தும் ‘நூ’ வுக்கு அரசியல் எதிர்ப்புகள் பெருகின. பர்மாவில்