பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

81



அயர்லாந்தின் விடுதலை
வீரன் டிவேலரா


பகட்டான விளம்பரமே அவனுக்குப் பகை!
பணி செய்து தியாகத் தழும்புகள் ஏற்பதே அவனுக்கு நகை!
கடமை உணர்ச்சிகளே அவனுக்கு மனசாட்சி!
கட்டுப்பாடான அரசியல் அறமே அவனது உணர்ச்சி
கண்ணியமிக்கப் போராட்ட உணர்வான எழுச்சி!
இவைகளை மக்களுக்கு செய்வதே புரட்சி!


அயர்லாந்து நாட்டு மக்கள் இடையே இத்தகையத் தேசிய உணர்ச்சிகளைத் தட்டிஎழுப்பிக் கொண்டிருந்தான் அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையெனப் போற்றப்பட்ட மாவீரன்டிவேலரா!

ஐரிஷ் மக்களுக்காக அயராது உழைத்த அருந்தலைவன் என்று அயர்லாந்து மக்களால் புகழப்பட்டதால், அவனை உலக விடுதலை வரலாறு அயர்லாந்து நாட்டின் விடிவெள்ளி என்றும், ஐரிஷ் மக்களின் தந்தை என்றும் போற்றுகின்றது. அந்த நாட்டு மக்களும் அவனிடம் அளவிடற்கரிய அன்பையும், பெருமையையும், நம்பிக்கையையும் வைத்திருந்தார்கள்.

இன்றைக்கு ஏறத்தாழ நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஸ்பானிய நாட்டுத் தந்தைக்கும் அயர்லாந்து நாட்டு மாதரசிக்கும், அமெரிக்காவிலே உள்ள நியூயார்க் என்ற மாநகரிலே பிறந்தவர்தான் இந்த டிவெலரா! இவரது