பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

83


அப்போது அயர்லாந்தில் நடந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்களது தேசிய எழுச்சியின் கடுமையான போராட்டங்கள்தான்.

அத்தகைய உயிர் பாதுகாப்பற்ற போராட்டத்திலே, பொதுநலத் தொண்டு செய்து உயிர் இழக்காமல் பிழைத்த ஒரு சிலரிலே ஈமன் டிவேலராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அயர்லாந்து நாட்டு மக்களின் தேசிய உணர்ச்சி நெருப்பு கொழுந்து விட்டு எரியும் எழுச்சியைப் பார்த்தார் டிவேலரா. இது எதிர்காலத்தில் இந்த மக்களது பேராட்டம் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது.

அதனால், அயர்லாந்து நாட்டு மக்களின் வாழ்வும், தாழ்வும் வெவ்வேறு அல்ல, நமது சொந்த வாழ்க்கையிலே ஏற்படும் வாழ்வும் தாழ்வும் வேறு அல்ல என்பதை அவர் பிரித்துப் பார்க்காமல், பொது நலமே தனது வாழ்வியல் நலம் என்று உணர்ந்தார்.

கி.பி. 1919-ஆம் ஆண்டில் அயர்லாந்து மக்கள் இடையே உருவான தேசியப் புரட்சியை, அப்போதைய அந்த நாட்டு பிரிட்டிஷ் அரசு, தேசியக் கலகம் என்ற பெயரைச் சூட்டி அடக்கு முறைகளை ஏவியது. இருந்தாலும், 1913-ஆம் ஆண்டு முதல் ஐரிஷ் நாட்டின் இளைஞர்கள் பலர் ஆயுதப் புரட்சிக்கு திட்டம் வகுத்து,