பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உலக வரலாற்றில்


அயர்லாந்து நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார்கள்.

அந்த இளைஞர்கள் அணியிலே டிவேலரா சேர்ந்து ஒரு சிறு அணியைத் தலைமை தாங்கி நடத்தினார். இதற்கு முன்பு டிவேலராவுக்கு ராணுவ முறைப் பயிற்சியோ, ஆயுதப் புரட்சிக்குரிய ஆக்கப் பணிகளோ ஏதும் தெரியாது.

என்றாலும், ஆயுதப் புரட்சியைச் செய்த மற்ற இளைஞர் அணிகளின் வீரதீர சாகச போர்த்திட்டங்களைவிட, அரிய முறையிலே தனது அணியை நடத்தி, மற்ற ராணுவ அனுபவ சாலிகள் எல்லாம் வியந்து பாராட்டும் அளவுக்கு டிவேலரா செயல்பட்டார்!

இத்தகைய வீரப்போர் புரியும் ஆற்றல் பெற்ற டிவேலரா, கி.பி.1919-ஆம் ஆண்டில் நடந்த அயர்லாந்து மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுநலத் தொண்டிலே மட்டுமே ஈடுபட்டாரே, ஏன்?

1919-ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்பு ஆயுதப் புரட்சியாளர்கள், தாங்கள் நடத்திய அப்போதைய புரட்சி நன்றாகத் திட்டமிட்டு நடத்தப்படாததால், தடி தூக்கியவன் எல்லாம் புரட்சிக்காரன் என்று தங்களையே சிலர் அவ்வாறு எண்ணிக்கொண்டு மனம்போன போக்கிலே புரட்சியை நடத்தியதால், அந்தத் தேசிய