பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

85


எழுச்சியானது புரட்சியாக மற்றவர்களுக்குப் புலப்படாமல் தேசியக் கலகமாகத் தோற்றமளித்தது. அதனால் டிவேலரா அந்த எழுச்சியில் நேரிடையாக ஈடுபடாமல், மக்கள் பொதுநலச் சேவைப் பிரிவில் சேர்ந்து தொண்டாற்றிடும் நிலை ஏற்பட்டது.

அது மட்டுமல்ல; புரட்சியை நடத்த முற்பட்ட ஆயுதமேந்திய இளைஞர் படைகள் எல்லாம். தங்களது வெற்றியிலேயே தங்களுக்குள் நம்பிக்கை அற்றவர்களாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குள் ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது என்றால், நாம் நடத்தும் ஆயுதப் புரட்சி ஓர் அடையாளம்தான் என்ற அளவோடு அந்த இளைஞர்களது படை திருப்தி அடைந்து விட்டதும் ஒரு காரணமாகும்.

இந்த ஆயுதம் தாங்கிய புரட்சிப் படைகளுக்கு இடையேதான், டிவேலரா தலைமை தாங்கி நடத்திய எழுச்சிப்படை மூர்க்கத்தனமாகவும், திறமையாகவும் செயல்பட்டதால், ராணுவப் பயிற்சி பெற்றிருந்த அந்த ஆயுதப்புரட்சியாளர்கள் எல்லாம் டிவேலரா தலைமையைக் கண்டு பெருமூச்சுவிட்டு ஆச்சரியப்பட்டார்கள்.

டிவேலராவின் அந்த ஆயுதப் புரட்சிப்படையின் செயல் திறனைக் கண்ட பிரிட்டிஷ் தளபதிகளிலே ஒருவர், “எல்லாருமே டிவெலராவைப் போலவே திட்டமிட்டு அணி வகுத்துப் புரட்சியை நடத்திய திறமை சாலிகளாக இருந்திருந்தால், ஐரிஷ் கலகத்தை எளிதில் அடக்கி