பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உலக வரலாற்றில்


இருக்கமுடியாது” என்று ஆவேசத்தோடும் வியப்போடும் கூறினர்.

தேசிய எழுச்சிப் புரட்சியின் போது பலவீனப்பட்டுத் தோற்றுப்போன படையினர், பிரிட்டிஷார் படையினரிடம் சரணாகதி அடைந்து விட்டார்கள். ஆனால், டிவேலரா மட்டும் சரணடையாமல் தனது படையின் அணிவகுப்பைத் தளரவிடாமல், சோர்வடைய விடாமல் மூர்க்கத்தனமான வெறியோடு போராடவைத்தார்.

இருந்தாலும், டிவேலரா அணியிலே இருந்த ஒரு சில கோழைகளின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், கடைசியில் டிவேலராவும் பிரிட்டிஷ் படையினரிடம் சரணடைந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சி, டிவேலராவையும், அவருடன் வீர தீரமாகப் போரிட்ட நண்பர்கள் ஆறுபேரையும் கைது செய்து, நீதிவிசாரணை நடத்தி, அவர்களுக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது. அவர்கள் லீவிஸ் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார்கள்.

டிவேலராவையும், அவருடன் தீவிரமாகச் செயல்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்களையும் ஆயுள் தண்டனை கொடுத்துச் சிறையிலே பூட்டிவிட்டதால், அயர்லாந்திலே இனி புரட்சி வெடிக்க வழியில்லை என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தப்புக்கணக்குப் போட்டது.

வீரன் எங்கிருந்தால் என்ன? அவனுக்கு சிறையும் - வீடும், நாடும் ஒன்றுதான் என்று சிந்தித்த டிவேலரா, தன்னுடன் இருந்த நண்பர்களையும், மற்ற சரணாகதி