பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

87


அடைந்த இளைஞர்களையும் ஒன்று திரட்டி, பல விதமான புரட்சிகளைச் சிறைக்குள்ளேயே செய்து கொண்டிருந்தார்.

சிறை அதிகாரிகள் சரணாகதியடைந்தவர்களை நேர்மையாக, மனிதாபிமானத்தோடு, நடத்தாமல், கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை டிவேலரா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தி, சிறைக்குள்ளேயே ஒரு புரட்சி இயக்கத்தை நடத்தி ஆட்சியினரை, சிறை அதிகாரிகளை ஆட்டிப்படைத்தபடியே இருந்தார்.

எதற்கும் அஞ்சாமல் ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து சிறைப் புரட்சி நடத்தும் டிவேலராவை, வேறு ஒரு சிறைக்கு மாற்றியது ஆங்கில ஆட்சி!

சிறையிலே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த டிவேலராவின் சிறைப்புரட்சிச் செயல்கள், நாட்டு மக்களிடையே பெரும் கிளர்ச்சியையும், எழுச்சியையும், உணர்ச்சிகளையும் உருவாக்கி, டிவேலராவின் நாட்டுப்பற்றுத் தியாகங்கள் மீது பெரும் நம்பிக்கையை, மரியாதையை, மதிப்பை உருவாக்கியது மட்டுமல்ல; டிவேலராதான் நமக்குரிய தலைவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின.

எதிர்பாராமல் டிவேலரா 1917-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்! மக்கள் அவர்மீது வைத்திருந்த