பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

7


சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார்.

இந்த நேரத்தில், இந்தியாவில் காந்தியடிகள் ஒத்துழையாமைப் போர் என்ற ஒரு போராட்டத்தை துவக்கினார். அது உலகமெங்கும் ஓர் அரசியல் விழிப்புணர்ச்சியையும் வியப்பையும் உருவாக்கியது. இந்திய நாட்டில் காந்தியடிகள் மூட்டிய விடுதலைத் தீயின் புகை மூட்டத்தை போஸ் இங்கிலாந்தில் இருந்த படியே உணர்ந்தார். அவரது மனதில் தேசபக்தி உணர்ச்சி பொங்கி எழுச்சி பெற்றது. உடனே ஐ.சி.எஸ். பட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்தியாவிற்கு வந்தார்.

காந்தியடிகளை பம்பாயில் சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார். வங்கத்தில் ஒத்துழையாமைப் போரை ஏற்று நடத்திக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் அவர்களையும் சந்தித்தார்.

சித்தரஞ்சன் தாஸை இந்திய மக்கள் சி.ஆர்.தாஸ் என்று அன்புடன் அழைப்பார்கள். அவர் சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோதே அறிமுகமானவர். அதனால் ஐ.சி.எஸ். பட்டத்தை உதறித் தள்ளிவிட்டு தன்னை வந்து பார்த்த சுபாஷை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினார்.கடமை உணர்ந்த தேசிய விடுதலை வீரன் என்று மக்களிடையே அறிமுகப் படுத்தினார்.