பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உலக வரலாற்றில்


உண்மையான நம்பிக்கையால், அவருக்கு மாபெரும் வரவேற்பை வழங்கி, வாழ்த்தினார்கள். அன்றைய வரவேற்புக் கூட்டத்தில் டப்ளின் நகர மக்கள் கடல்போலத் திரண்டு வந்திருந்தார்கள்.

சிறையிலே இருந்து விடுதலை பெற்ற டிவேலரா, மனம் மாறிக் காணப்பட்டார். ஓர் ஏகாதிபத்திய ஆட்சியை வன்முறைப் புரட்சிகளால் தூக்கி எறிய முடியாது. சட்டத்துக்கு உட்பட்ட செயல்முறைகளால் தான் அந்த அரசை அகற்ற முடியும் என்று உணர்ந்தார்.அதாவது, ஈமன் டிவேலரா என்ற அந்தப் புரட்சியாளன் கத்தியின்றி. ரத்தமின்றி, அகிம்சா முறைகளாலான சட்டத்துக்குட்பட்ட போராட்டங்களால் தான் ஐரிஷ் மக்களுக்குரிய சுநந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும் என்ற அயர்லாந்து காந்தியடிகளானார்.

தனது காந்தீய சிந்தனைக் கேற்றவாறு, அயர்லாந்து மக்களுக்காக ஐரிஷ் என்ற கட்சி, அதாவது ஐரிஷ் மொழியிலே சின்ஃபின் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் துவக்கினார்.

இந்தக் கட்சியிலே, நாட்டு மக்களை உறுப்பினராக்கினார்! அயர்லாந்து நாட்டு மக்களது விடுதலைக்காக அரும்பாடுபட்டு வந்தார்: “உடல் மண்ணுக்கு, உயிர் நாட்டு விடுதலைக்கு” என்று விடுதலைத் தாரக மந்திரத்தை உருவாக்கி மக்கள் இடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.