பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

உலக வரலாற்றில்


கட்டுக்கு அடங்காமல் கலகம் செய்து கொண்டிருந்த மக்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது அல்லவா? அந்தக் கிளர்ச்சிக் காரர்களுடன் டிவேலராவையும் சேர்ந்து லிங்கன் என்ற சிறையிலே அடைக்கப்பட்டார். இதனால் அயர்லாந்து மக்கள் கொதிப்படைந்து, கடலலைகளைப் போல பொங்கி எழுந்தார்கள்.

ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவுக்காக ராணுவத்தில் கூலிப்பட்டாளமாகச் சேருவதை விட, ‘அயர்லாந்து நாட்டுக்குச் சுதந்திரம் கொடு! இல்லையானால் போராடிச் சாவோம்’ என்ற விடுதலைக் கோஷங்களை வீதி வீதியாக எழுப்பிக் கொண்டு மக்கள் டப்ளின் நகரத்தையே முற்றுகையிட்டார்கள். இந்தச் சுதந்திரக் கொந்தளிப்பு அயர்லாந்து முழுவதும் வீராவேஷமாகப் பரவியது.

“எங்கள் தலைவர் டிவேலரா வாழ்க! அவர் என்ன கூறுகிறாரோ அதைத்தான் கேட்போம். பிரிட்டிஷ் உத்தரவை மதிக்கமாட்டோம்; மீறுவோம் அயர்லாந்து பிரிட்டிசுக்கு ஒத்துழைப்புத் தராது பிரிட்டிஷ் ஆட்சியே அயர்லாந்தை விட்டு வெளியேறு” என்று மக்கள் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியபடியே, வாழ்க டிவேலரா! ஓங்குக ஐரிஷ் இயக்கம் என்று ஊர்வலம் சென்றார்கள்! இந்த ஊர்வலத்தினர் வன்முறையிலும் ஈடுபட்டார்கள்.

1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐரிஷ் சட்டமன்றத்தின் முதற்கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அப்போது சிறையிலே அடைக்கப்