பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

உலக வரலாற்றில்


நடைபோட்ட சின்ஃபின் இயக்கத்திற்குக் கூட அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

டப்ளின் நகரத்திலுள்ள அரண்மனை ஒன்றில் நடந்த மக்கட்கட்சியினர் கூட்டத்தில் டிவேலராவைப் பற்றி ஏதேனும் புதிய செய்திகள் உண்டா? என்று ஒருவர் எழுந்து கேட்டார்.

ஆனால், அக் கூட்டத்தினர் யாரும் ஒன்றும் கூறாமல் ஊமையாக இருந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ஒன்றும் கூறாமல் இருந்து விடக்கூடாது என்று நினைத்து மைக்கேல் காவின்ஸ் என்பவர், டிவேலராவிடம் இருந்து தனக்கு ஏதோ ஒருசெய்தி வந்ததுபோல காட்டிக்கொண்டார்.

“நான் லிங்கன் சிறையில் இருந்தபடியே நாட்டுக்குரிய விடுதலைத் தொண்டுகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று அவர், தனக்கு வந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறினார்.

மைக்கேல் காலின்ஸ் சொல்லியது உண்மைதான என்றாலும், டிவேலரா தன்னைப் பற்றி அப்படிச் சொல்ல நினைக்க மாட்டாரே! நாட்டுத் தொண்டே அவர் செய்து கொண்டிருப்பதனால், அதற்காக, ‘நான் ஓடினேன்’ என்று அவர் கூற வேண்டியதில்லை. சிலநாட்களுக்குள் அவர் அயர்லாந்துக்கே கொண்டுவரப்பட்டார்.

டிவேலரா சட்டசபைத் தலைவராக இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தபோதும் ஆங்கில ஆட்சியினைப் பொருட்படுத்தாமல், வருவது வரட்டும் ஒருகை