பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

93


பார்ப்போம் என்ற மன உறுதியோடு, அயர்லாந்து நாட்டை ஆளத் தொடங்கியது. ஆனால், இதற்குப் பணம் தேவை அல்லவா?

பணம் கிடைக்கும் இடம் அமெரிக்கா நாடுதான் என்று நினைத்த டிவேலரா, உடனே நியூயார்க் நகர் போய் சேர்ந்தார். தேவைக்கான பணமும் அவருக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், அயர்லாந்து நாட்டில் சண்டை பலமாக மூண்டுவிட்டது.

இந்தச் சண்டை 1921-ஆம் ஆண்டு சிறுபோராக, நடந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் டிவேலரா மக்களுக்காக இந்தச் சண்டை நடுவிலே தோன்றினார்.

இதைக் கண்ட அயர்லாந்து மக்கள் அனைவரும் டிவேலராதான் எங்கள் தலைவர் என்று கோஷமிட்டார்கள். ஒருவாறாக அந்த இருபிரிவினர்களுக்கு இடையே அமைதி உருவானது.

டிவேலராவால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், லண்டன் மாநகருக்குச் சென்று அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ் என்பவரைச் சந்தித்தார்கள். உடன்படிக்கையில் கையொப்பம் செய்தார்கள். ஆனால், டிவேலரா தன்னிடம் காட்டாமல் எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போடக்கூடாது என்று கூறியிருந்தார்.

ஆனால், அந்தப் பிரதிநிதிகள் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஏனெனில் லாயிட் ஜார்ஜ், உடனே