பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

உலக வரலாற்றில்



குடியரசு கட்சியார், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முழு ஆதிக்கத்திலேயே குறிக்கோளாக இருந்தார்கள். ஆனால், டிவேலராவோ முழு ஆதிக்கத்துடன் மட்டுமல்ல; ஐரிஷ் மக்களின் நன்மையையும், நல்வாழ்வையும் முக்கியமாகக் கருதியிருந்தார்.

டிவேலரா உடன்படிக்கையை மறுத்த போது, ஒரு வகையாக மக்களின் விருப்பத்தையே அவர் தெரிவித்தார் எனலாம். உடன்படிக்கை கையெழுத்திடப் படாதிருப்பின் தேர்தல் உலகம் அதனைத் தள்ளியிருக்கும். டிவேலரா அந்தச் சமயத்தில் சற்று தாழ்வுற்றிருந்தாலும், அது மறுபடியும் அவர் உயர்வதற்கே காரணமாகவும் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடன் படிக்கையைத் தழுவின கட்சி கடைசியாக அவமானம் அடைந்தது. மக்களுக்குத் தேவையானது இன்னது என்று முன்னதாகவே அவர் அறிந்தபடி பிறர் எவரும் உணரவில்லை.

டிவேலரா, தனது இயற்கை அறிவு செல்லுகின்ற வழியில் அவர் போகுமளவும், மக்கள் என்றாவது எப்படியாவது அவரையே இறுதியாகப் பின்பற்றுவார்கள் என்றும் அப்போதைய ஐரிஷ் நாடு சிந்தித்துக் காத்திருந்தது.

1932-ஆம் ஆண்டில் டிவேலரா கட்சி புது ஆதிக்கத்திற்கு வந்தது. தற்கால நிலையையும், எதிர்கால