பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

97


முடிவையும் பற்றிப் பேசுவது கடினம் என்பதை 1932-ஆம் ஆண்டு உணர்த்தியது.

டிவேலரா இப்போது தவறினால், அவருடைய அரசியல் வைராக்கியத்தினாலாவது, பொருளாதாரத்துறையில் தப்பு செய்வதினாலாவது அந்த தவறுதல் ஏற்படாது.

இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் உள்ள பத்திரிகை உலகம் அவ்வாறு கணிக்கலாம். அவருடைய பொருளாதாரக் கொள்கை வெற்றிபெறுதலே ஆகும்.

பொருளாதாரத் துறையிலாவது, சமுதாயத் துறையிலாவது அவருக்குச் சோதனை வராது. முழு ஆதிக்கக் கொள்கை சார்பாக வேண்டுமானால் சோதனை ஏற்படக் கூடும்.

டிவேலரா தன்னை மக்களின் தொண்டனாகக் கருதி மக்களுடைய தற்காலத்துக்கு சம்மதித்து விட்டார். முழு ஆதிக்க ஆர்வத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதற்கு அடையாளங்கள் தோன்றுகின்றன.

அவ்வாறானால், அதற்கு ஒரு முடிவு தான் அமையக் கூடும். யாருக்காக டிவேலரா தன்னைத் தியாகஞ் செய்தாரோ, அந்த மக்கள் அவரைக் கடைசியாகக் கழித்து விடவும் கூடும். ஏனென்றால், நாட்கள் நகரநகர உச்ச நிலைக்குத் தங்களை நடத்துகின்ற தலைவரைத் தான் மக்கள் பின்பற்றுவார்கள். அயர்லாந்தில் உள்ள கர்வத்தின் உச்சத்தைப் பிறநாட்டினர் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது.