பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 உலக

பத்தே பத்துதான். 1906-ல் அவர் எழுதிய நூல் ஒன்று கிடைத்தது; அதில் முறை என்பதைப்பற்றி எழுதியிருக்கிறர் என்கிருர்கள் அறிஞர்கள்.

    கணித இயல், வானவியல், பெளதிக இயல் என்பவைகளைப்பற்றி அருமையான ஆராய்ச்சி நூல்களே எழுதி இருக்கிறர். அவருடைய ஆராய்ச்சியின் முடிவுகள், இக்காலத்திய ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் பளிச்சிடுவதைக் காணலாம், என்கின்றனர் விஞ்ஞானிகள். அவை சிலவற்றிற்கு, இன்னும் 'ஆர்க்கிமிடிஸ் சித்தாந்தம்' என்றே பெயர் கூறப்படுகிறது.
   அவருக்கு முன்பு அப்படி ஒரு விஞ்ஞானி இருந்ததாக நமக்கு வரலாறு கூறவில்லை. ஆனால் அவர் விஞ்ஞானத்தைப் பற்றி எழுதியவை எவ்வளவோ, அவ்வளவு பொருட்களையும் செய்து காண்பித்தார், என்றே கூறலாம். இவ்வளவு பெரிய, மேதையாயிருந்துங்கூட ஆணவமோ, அகம்பாவமோ சிறிதுமில்லாமல் குடிமக்களில் ஒருவராகவே மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு ஒரு மனிதனாகப் பழகிவந்தார். அரசனுடைய முழு ஆதரவு இருந்தது. பல விஞ்ஞானிகள் அவரைச் சூழ்ந்து ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவற்றுக்கெல்லாம் முகம் கோணாமல் பதில் சொல்லிக்கொண்டே யிருந்தார். அவ்வளவு சாது வானவர். இப்படியே இவர் தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, மார்சேல்ஸ் எனும் ரோம் படைத் தல்வன் தன் நாட்டின்மேல் படையெடுக்கப்போகிறான் என்பதை அறிந்த ஹீரோ என்ற மன்னன் எதிரியின் படைகளை முறியடிக்கத்தக்க ஆயுதங்களைச் செய்து தரும்படி கேட்டுக்கொண்டான்.
   ஆர்க்கிமிடிசுக்கு எவ்வளவுதான் தம் ஆராய்ச்சியின்மேல் நினவிருந்தாலும் தான் பிறந்த நாடு என்ற பற்றிருக்கு மல்லவா? ஆகையால், மன்னன் கட்டளைப்படி எதிரியின் படையெடுப்பை சமாளிப்பதற்காக ஆயுதங்கள் செய்து கடற் கரையில் நிறுத்தி வைத்திருந்தார்.