பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. 驟。蘇Q轟 தெரிகிறது. ஆல்ை உண்மையாக எத்தனை டிகிரி காய்ச்சல் என்று திட்டமாகச் சொல்லமுடியாதல்லவா? அதைச் சரியாக அளந்துகாட்டும் கருவி தான் தர்மாமீட்டர். இதைக் கண்டு பிடித்துத் தந்தவரும் கலிலியோதான். பாரன்ஹீட் எனப் படும் கருவியையும் கண்டுபிடித்திருக்கிருர். எலக்ஹர்ன் என்ற துறைமுகத்தில் அடிக்கடி மணல்வந்து சேர்ந்துவிடுவதால் கப்பல்கள் வந்து தங்குவதற்கு முடியாமல் போயிற்று. அந்த மணலே அப்புறப்படுத்த ஒரு இயந்திரம் செய்து தரும்படி ஒரு விஞ்ஞானியைக் கேட்டிருந்தார்கள். அவரும் அதைச் செய்து தந்தார். அதைக் கண்ட கலிலியோ இது பயன்படாது என்று சொல்லிவிட்டார். அவர் சொல்லிய தைப் போலவே அது பயன்படாமலே போயிற்று. அதையும் இவருடைய எதிரிகள் ஒப்புக்கொள்ளாமல், இவரை ஊரை விட்டே விரட்டினர்கள். அதல்ை இவர் தன் குடும்பத்தோடு பாரிசுக்குப் போகவேண்டியதாயிற்று. இவ்வளவு சிறப்புப் பெற்றவராயிருந்தும், அவருடைய குடும்பம் வறுமையில் தான் இருந்துவந்தது. ஒரு தாயார், இரண்டு சகோதரிகள். இவர்களே வைத்துக் காப்பாற்றுவதில் பெரிய வேதனை யடைந்தார். அத்தோடு அவர் தந்தையும் இறந்துவிட்டார். இறுதியில் இவருக்குச் சிறு ஊதியத்தில் ஒரு ஆசிரியர் வேலை கிடைத்தது. அதை வைத்துக் குடும்பம் நடத்தமுடியாமல், சில மாணவர்கள் இல்லங்களுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்துக் குடும்பத் தொல்லேயை ஒருவாறு நீக்கினர். இவர் கணிதம், பெளதிகம் ஆகியவற்றில் மிகச் சிறந்தவராயிருந்த தால் இவரிடப் பாடம் கேட்கவும், சொற்பொழிவாற்றினல் அதைக் கேட்கவும் கூட்டம் கூடிவிடும். ஒரு அரங்கில் இவர் சொற்பொழிவு நிகழ்த்துகிருர் என்ருல், எள்விழ இடமிருக்காத வகையில் மக்களும் மாணவர்களும் கூடிவிடுவார்கள். அதனல் கூட்டத்தின் நெரிசலை சமாளிப்பதற்காக திறந்த வெளியில் சொற்பொழிவை நடத்துவதுமுண்டு. இப்படியே இவர் பாடம் சொல்லிக்கொண்டும், கணிதம் பெளதிகம் முதலான வற்றை ஆராய்ச்சி செய்து கொண்டும் வரும்போது 1604ல் வானில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. அது என்ன