பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 35. 2. இருதயத்துக்கு வருகிறது. அதில் இரண்டு அறைகள் உண்டு. அவற்றில் இரண்டுவிதமான இரத்தம் காணப்படுகிறது. - 3. அவைகள் வெவ்வேறு குழாய்கள் மூலம் உடம்பு முழுவதும் சென்று ஊறிவிடுகின்றன. இவ்வளவு அருமையான முடிவுகளை அவர் தெள்ளத் தெளிய தெரிந்திருந்தும், உடனே உலகத்துக்கு அறிவித்து விடவில்லே. இதைக் கண்டுபிடித்து மாணவர்களுக்கு மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தவர் பனிரெண்டு ஆண்டு களுக்குப் பிறகு, உலகுக்கு 16:8ல் கூறினர். 1ேேல் இவரை ஜெர்மன் சக்ரவர்த்தி பெர்டினன்டிடம் தூது சென்ற அருண்டேல் என்பவரோடு அனுப்பி வைத்தார் கள். அப்போது பேர் போன 0ே ஆண்டுகள் போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரின் முடிவு என்ன என்பதைப் பற்றி அவர் கவலேப்படவில்லை, போரில் அகப்பட்டுக் கொண்டு செத்த பிராணிகள் எங்காவது கிடைக்குமா என்று பார்த்தார். இதை அவர் ஊருக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறுகிறர் : இங்கே அறுத்துப் பரிசோதிக்க ஒரு நாயோ காகமோ இல்லாதபடி, எனக்கு முன்னதாகவே படுபஞ்சமும் நோயும் அவைகளைப் பரிசோதனை செய்து முடித்து விட்டன. ’ அவருக்கு அரசியலில் அவ்வளவு பிடிப்பு இல்லையென்றலும் கூட அவர் அரசனுடைய மருத்துவராயிருந்ததால், மன்னர் செல்லவேண்டிய இடங்களுக்கெல்லாம் செல்லவேண்டிய வரானர். இந்தச் சோதனைகளுக்கெல்லாம் முக்கியமாகத் தேவைப்படுகிற பூதக்கண்ணுடி அப்போது இல்லை. அது வரையிலும் அது கண்டுபிடிக்கப்படவில்லே. ஒரு விடிை கூட சும்மாயிருக்கமுடியாமல் தோட்டத்தில் ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்வார். எனக்கு இருட் டில்தான் மூளை அதிகமாக வேலை செய்கிறது என்பார்.