பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் - 41 பார்கள். கல்லால் அடித்தால் கீழே விழும் என்று மட்டிலும் தெரிந்து கொண்டிருந்தார்களே தவிர, அது ஏன் கீழே விழ வேண்டும், அப்படியே மேல்நோக்கியோ, அல்லது பக்கத்தில் ாங்கேயோ பறந்து போய்விடக்கூடாதா என்று யாரும் எண்ணவுமில்லை; ஏன் என்று கேட்டுக்கொள்ளவுமில்லை. நியூட்டன் ஒருவர்தான் சிந்தித்தார். அதைக் கொண்டே நிலத்துக்கு இழுக்கும் சக்தி இருக் கிறது, அது இழுத்து விடுகிறது, எந்தப் பொருளையும் மேலே போட்டால் அது நிலத்தை நோக்கித் தான் விழும், அதுவும் செங்குத்தாக விழாமல், கொஞ்சம் சாய்வாகத்தான் விழும் என்பதை அறிந்தார். அதனைச் சோதித்துப் பார்த்த இடம் தான் இத்தாலியிலுள்ள பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம் என கலிலியோ வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருந்தோம். நியூட்டன் கண்டது மற்றென்று. கோளங்கள் ஒன்ருே டொன்று மோதிக் கொள்ளாமல் ஒரேவிதமாகச் சுற்று நிலை பெற்றிருப்பதைக் கண்டார். சூரியன் நிலைபெற்றிருக்கிறது. பூமிதான் அதைச் சுற்றி வருகிறது என்பதால், பூமி தன்னைத்தானே ஒரு மணிக்கு ஆயிரம் மைல் சுற்றுகிறது என்று கணக்கிட்டு, பூமி சுற்றிக் கொண்டேயிருந்தால் நாம் கீழே விழாமலும் நம் கண்களுக்குத் தெரியாமலும் இருப்பதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கினர். . . - பூமியின் இழுக்கும் சக்தியைக் கடந்து போனல் சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தி இழுத்துவிடுகிறது. பூமியின் இழுக்கும் சக்தி குறைந்தோ, சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தி அதிகமாகவோ இருக்குமானல், ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும். அப்படியில்லாமல், இரண்டு சக்திகளுக்கும் இழுக்கும் ஆற்றல் சமபலத்தில் இருக்கிறது என்று கண்டார். ஆனால், நாம் ஒரு சைக்கிளே ஒட்டுகிறபோது மெது வாக ஒட்டினல், சாய்ந்துவிடும் போலிருக்கிறது. வேகமாக பூ-116-உ-5 -