பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 43 தொலைநோக்கும் கண்ணுடியை (Telescope)ப் பற்றி ஆராயவேண்டுமென்றெண்ணி அதன் பக்கம் ஆராய்ச்சியைத் திருப்பினர். முதலாவதாக, வெளிச்சத்தின் பயனஅறிந்து அதைக்கொண்டு டெலஸ்கோப்பைக் கண்டுபிடிக்க வேண்டு மென்ற முடிவிலேயே சிந்தையைச் செலுத்தினர். 1888 ல் ஆறு அங்குலம் நீளமுடையதும் ஒரு அங்குலம் விட்ட முடையதுமான டெலஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் ஜுபிடரைக் காண முடிந்தது. இதன் மூலம் சர் ஹெர்செல் லார்ட் ருஸ் என்பவர்களின் ஆராய்ச்சியில் விட்டிருந்த உண்மைகளை முடித்து வைத்தார். §asor o-363 Gororói- Satellites and Jupiter odou வற்றைப் பார்க்க முடிந்தது. 1889 ல் பார்ரோ, இலக்கணப் பேராசிரியராயிருந்த லுகாசியா என்பவர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் அந்தப் பதவிக்கு நியூட்டன் தேர்ந் தெடுக்கப்பட்டார். அதோடு ராயல் கழகத்தின் உறுப்பின ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ராயல் கழகத்தில் உறுப்பினராவது என்பது சாதாரணமாக எல்லாருக்கும் கிடைப்பதில்&ல, அந்தப் பதவியின் மூலமே டெலஸ்கோப் அனைவருடைய கவனத்தைக் கவர்ந்தது, 1866 ல் ஸ்டவர் பிரிட்ஜ் என்ற ஊரில் நடந்த பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காகஅந்த டெலஸ்கோப்பை வைத்திருந்தார்கள். அதைக்கொண்டே வானவில்லில் இருக்கும் நிறங்களையும் அதன் தன்மைகளையும் கண்டறிய மிகவும் உதவியாக இருந்தது. - - இந்த ஆராய்ச்சியின் முடிவாக ஒளி, ஒரு செகண்டுக்கு ஒரு லட்சத்து தொண்ணுாறு ஆயிரம் மைல்கள் அண்ட வெளியில் தெரியும் என்பதை நிலை நாட்டினர். இந்த நாளில் நியூட்டனுடைய பொருளாதாரம் அவ்வளவு போதுமானதாக இல்லாத காரணத்தால், ராயல் கழகத்துக்குத்தான் செலுத்த வேண்டிய தொகையை,ஒரு வாரத்துக்கு ஒரு ஷில்லிங்கு ஆக்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். -