பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பதிப்புரை


சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்கள் எழுதிய புதிய சிக்தனை நூல் வரிசையில் இது மூன்ருவது நூலாகும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உலகமெங்கும், விஞ்ஞான வளர்ச்சி மிகவும் ஓங்கியிருந்தது. பல முக்கிய கண்டுபிடிப்புகள் அப்போது தான் நிகழ்ந்தன. அதன் வளர்ச்சியைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிருேம்.

விஞ்ஞான வளர்ச்சிக்கு வரம்பே கிடையாது. பல துறைகளிலும் அது பல்கிப் பெருகி கிளேவிட்டு வளர்ந்திருக் கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி, விண்வெளி யெங்கும் பரவியிருக்கும் விண் மீன்களையும், சூரிய, சந்திரன்களையும் கால கதி தவராது, நியமத்துடன் இயக்கி வருகிறது. உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் அதே சக்திதான் இயக்குகிறது.

இயக்கும் அந்த சக்தியின் மூலக் கூறுகள் என்ன என்பதை ஆராய்வதே