பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

フ சார்லஸ் டார்வின் மனிதத் தோற்றத்தையும், முடிவையும் தலைவிதி என்றனர். ஆண்டவன் படைப்பு, அவனல்லாமல் ஒரு புல்லேயும் அசைக்கமுடியாது என்கின்றனர் பக்தர்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற அளவோடு நின்று விடுகின்றனர். ஆனால் அந்தக் குரங்கு எப்படித் தோன்றிற்று. புழு, பூச்சிகள் எப்படித் தோன்றின. மீன்கள் நத்தைகள், நீர் வாழ்வன, நிலத்தில் ஊர்வன எல்லாம் எப்படித். தோன்றின, என்ற ஐயத்தையும் ஆராய்ச்சியையும் தீர்த்து வைத்தவன் டார்வின், எந்தச் சீர்திருத்தமாயிருந்தாலும், எந்தப் புதிய கண்டு பிடிப்புகளாக இருந்தாலும் எந்தப் புதிய கொள்கைகள் பழமையை சாடுவதாயிருந்தாலும், மடால யங்கள் சீராமல் இருந்ததில்லை. சமுதாய ஒப்பந்தத்தை எழுதிய ரூசோவுக்கு எதிர்ப்பு, பிராடஸ்டன்ட் மதத்தைக் கண்ட மார்டின் லூதர், விஞ்ஞானிகளில் கலிலியோ, நியூட்டன், சால்வினி. ஜேம்ஸ் வாட், எட்வர்ட் ஜென்னர், எடிசன், மார்கோனி, வில்பர் ரைட் என்பவர்களெல்லாம் கூட எதிர்ப்பை சந்தித்தவர்கள்தான். அதேபோலத்தான், அறிஞன் டார்வின் எழுதிய இனத்தின் மூலத்தோற்றம் என்ற நூலுக்கும் எழுந்தது. நூல் வெளியானவுடன் பெரும்புயல்கிளம்பிவிட்டது. ஆத்திரப்