பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 - இ.கி. க. இவர் 1835ல் கான்சல் பதவியை ஏற்று, துணை கான்சலாக லிஸ்பனுக்கு அனுப்பபட்டார். அலெக்ஸான்டிரியாவுக்குப் போய், அந்தப் பதவியை ஒப்புக்கொள்ளப் போகும்போது தான் சூயஸ் வாய்க்காலப்பற்றிய நினைவு.அவருக்கு வந்தது. அவர் பயணம் செய்த கப்பல் துறைமுகத்தில் சில மணி நேரம் நங்கூரமிட்டிருந்தபோது சூயஸ் கால்வாய் நினைவும், அவருடைய தலைவர் அவருக்குக் கொடுத்தனுப்பியிருந்த நூல்களைப் படித்ததும், அவருடைய எண்ணம் இன்னும் உறுதியாயிற்று. நெப்போலியன் விருப்பப்படி 1797 பெபெரி என்ற இன்ஜினியர் எழுதிய நாலும் துணை செய்தது. அது முதற் கொண்டே அவர் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினர். 1888 முதல் 1857 வரை கெய்ரோவில் கான்சலாக இருந்தபோது மக்களை தாக்கிய கொடியப் போக்கை சமாளித்ததன் காரணமாக இவருக்கு ஒரு சிறப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது. ஏழாண்டுகளாக விடாமல் நோயின் கொடிய போக்கிற்கிடையே மக்களைக் காப்பாற்றிய பிறகு, இரகசியத் தூதுவகை ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட பின், வேலையை ராஜிநாமா செய்துவிட்டார்.பத்திரிக்கையை ப்ார்த்துக்கொண்டே வந்தபோது தனது நண்பன் செயத் பாஷா பட்டத்திற்கு வந்தார் என்ற செய்தியைப் படித்து மட்டில்லாத மகிழ்ச்சி கொண்டார். அதைக் கண்டவுடன் இருபத்தி இரண்டாண்டுகளாகத் தன் உள்ளத்தில்,தோன்றிய எண்ணம் கைக்கூடும் என்று உறுதியாக நம்பி, பாஷாவைச் சந்தித்து திட்டத்தை விவரித்தார். கால்வாய் வெட்டுவ தால் தன் நாட்டிற்கு (எகிப்துக்கு) ஏற்படப்போகும் நன்மை களே எண்ணி லெஸ்ஸ்ெப்ளின் திட்டங்களை நிறைவேற்ற பாஷா சம்மதித்தார். ‘நான் திருப்தியடைந்து விட்டேன்: உன் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்: என்ற உறுதி யையும் அளித்துவிட்டார். இதையறிந்த அன்றைய பிரிட்டனின் தலைமையமைச்சராயிருந்த பார்ம்ஸ்டோன் என்பவர், உன்னுடைய திட்டத்தை பிரிட்டன் தன்