பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


விஞ்ஞானம். விஞ்ஞான ஆராய்ச்சியின் பயனாக ஒன்றன்பின் ஒன்றாய் புதிர்கள் விடுபடுகின்றன. இயற்கையின் உட் பொருளை ஆராய்ந்து கண்டு பிடித்தவைகளே விஞ்ஞான உண்மைகளாயின.

இவ் விஞ்ஞான உண்மைகளை அறிய, புதிர்களை விடுவிக்க எண்ணற்ற விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையையே அர்பணித்தனர்.

அத்தகைய சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றியும் சுருக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஏற்கனவே இவர் எழுதிய “உலகைத் திருத்திய உத்தமர்கள்”, “மாபெரும் வீரர்கள்” என்ற இரண்டு நூல்களை நங்கள் வெளியிட்டிருக்கிருேம்.

அந்த வரிசையில் வந்துள்ள “உலக விஞ்ஞானிகள்” என்ற நூலினையும் தமிழக மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிருேம்.

---பூம்புகார் பிரசுரம்.