பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக விஞ்ஞானிகள் 73 களிப்பும் கவலையும் கியூரி சிறுமியாக இருந்தபோது தெருவில் போய்க் கொண்டிருந்த ஜிப்பி கிழவி ஒருத்தி, விளையாடிக்கொண் டிருந்த சிறுமிகளேப் பார்த்துக் கையை நீட்டும்படிக் கேட்ட தாகவும், எல்லாக் குழந்தைகளும் பயந்து ஓடிவிட, கியூரி மட்டிலும் தைரியமாக முன்வந்து தன்னுடைய கையை அக்கிழவி முன் நீட்டியவுடன், அந்தப் பிஞ்சுக் கரத்தைப் பார்த்து வியந்துபோன கிழவி, கியூரியிடம் நீ உலகம் புகழப் பேரெடுப்பாய் என்று சொல்லிவிட்டுப் போனதாகவும் கியூரியினுடைய இளமை வரலாறு கூறுகிறது. கவலை கியூரி சிறுமியாயிருந்தபோதே அந்நாட்டில் நிலவிய இனவேற்றுமை, சர்வாதிகாரக் கொடுமை தாங்கமுடியாமல், புரட்சிகர இளைஞர் சங்கத்தை அவள் நிறுவ வேண்டிய தாயிற்று. ஒரு பக்கம் இனவேற்றுமை, மறுபக்கம் அடக்கி யாளும் கொடுமை, இன்னொரு பக்கம் தாய்மொழி மறுப்பு ஆகிய இந்த மூன்று காரணங்களோடு இன்னுெரு சகிக்க முடியாத வேதனையான காரணமும் ஒன்றிருந்தது. அதாவது ஆஸ்டிரியா ஆளுகைக்குட்பட்ட கராரோ என்ற ஒரேயொரு பல்கலைக் கழகம்தான் இருந்தது. அதில் செயலாளரைச் சந்தித்த பின்புதான் அங்கு நடைபெறும் விஞ்ஞானச் சொற்பொழிவுகளைக் கேட்கவேண்டும். அதற் காக கியூரி முன் அனுமதி கோரிள்ை. அதைக் கேட்ட செய லாளர், ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்துவிட்டு, அம்மா, பெண்கள் விஞ்ஞானத்தைப் பற்றிப் படிக்கவோ, சொற். பொழிவுகளைக் கேட்கவோ இந்தப் பல்கலைக் கழகத்தில் உரிமை தருவதில்லை; தரவும் கூடாது. ஆகையால் பெண் களுக்கென்று தனியாகச் சமையல் கலே பயிலும் வகுப்பு இருக்கிறது, அதில் படிக்கலாம்’ என்றர். இதுதான் தான் பிறந்த நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், அதுவும் அரசாங்கத்தால் நடத்தப்படுகிற பல்கலைக்கழகத்தில், ஒரு էէ116-ռ--5