பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 75 Hendry Becquerel என்பவர் அதை மேலும் விரிவு படுத்தினர். தற்செயலாக பல ரசாயனப்பொருட்கள் கறுப்புத் துணியால் சுற்றப்பட்டு, ஒரு இருட்டறையில் போட்டோ தகடுகளின் பக்கத்தில் கிடப்பதைக் கண்டு அதன் மூலம் எழுந்த ஒரு புதிய ஒளி அலையைக் கண்டு பிடித்தார். தன் பெயராலேயே பெக்குரியல் ரேஸ் என்று அதற்குப் பெயர் வைத்தார். அதன் பிறகு கியூரியும் கணவனும் சேர்ந்து பல இரசாயனப் பொருட்களைக் கொண்டு Radioactivity என்பதைக் கண்டார்கள். இது மனித இனத்துக்குப் பல வழிகளில் பயன் தரும். அதாவது, இந்த ரேடியோ ஒளியின் செயல்கள் சூரிய வெப்பத்தோடு கலந்து, மினரல் நீரால் நம் உடல் நலத்தைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவும் கிடைத்தது. கறுப்பு நிறம் கூடியதும் மிக உறுதியானதுமான பொருளால் இது கண்டுபிடிக்கப்பட்டது எ ன் பதால், அதற்குத் தன் தாயகத்தை மறந்துவிடாமல் Polaniam போலோனியம் என்று பெயர் வைத்து, கடைசியில் ரேடியம் என்று பெயர் வழங்கப்பட்டது. ரேடியத்தினுடைய உதவிகள் சொல்லமுடியாத அளவுக்கு, மனித சமுதாயத்துக்குப் பயன்பட்டது. அதைக் கொண்டு புற்று நோய், டைபாயிட், காலரா, அந்தராக்ஸ் போன்ற நோய்களை ரேடியத்தால் வெல்லமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதனை எவ்வளவு தொல்லைக்கிடையே கண்டுபிடித்த்ாள் என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அதைக் கண்டு பிடிக்க ஒரு டன் Pichblande (தார்க்கட்டி), மற்றும் ஐம்பது டன் தண்ணிர் செலவழித்ததில் ஆறு கிராம் ரேடியம் கிடைத்தது. இந்த ஆராய்ச்சியில் தன் கையை வேக வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகப் பயன்படுத்த வேண்டிய முள்ளேயும் கரண்டியையும்கூட தொடமுடியாத வராய்விட்டார். இங்கிலாந்தில் இதன் மகிமையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பியாரி கியூரி என்பவருடைய கைகள் வெந்துவிட்டன. இதல்ை நோய் வாய்ப்பட்ட தன் மனைவியை இந்த மரண ஆராய்ச்சியை விட்டுவிடும்படி கியூரியைத் தன் கணவர் எவ்வளவோ கேட்டுக்கொண்டும்,அந்த அம்மையார்