பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக விஞ்ஞானிகள்


1

ஆர்க்கிமிடிஸ்


சில நூற்றண்டுகளாகவே எந்தெந்த விஞ்ஞான சாதனங்கள் நமக்குப் பயன்படுகின்றனவோ, அவை ஒரு காலத்தில் விஞ்ஞானிகளால் எவ்வளவு முயற்சிகளுக்கிடையே கண்டுபிடிக்கப்பட்டன என்பதை, விஞ்ஞானிகளைப் பற்றிய வரலாறுகளே, தாமும் நமக்கு அடுத்து வரும் தலேமுறை பினரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதத் தொடங்கிணோம்.

முதலில் ஆர்ச்கிமிடிசைப் பற்றி எடுத்துக் கொள்வோம். ஒரு உலோகத்தோடு மற்ற உலோகம் கலப்படம் செய்யப் பட்டிருக்கிறதா? அப்படியிருந்தால் அசல் உலோகத்தோடு கலப்படம் செய்யப்பட்ட வேறு உலோகத்தின் எடை எவ்வளவு என்பதை “ஆசிட்” (Acid) என்ற ஒரு அமிலத்தின் மூலம் கண்டுபிடித்து விடலாம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு, அதாவது ஆர்க்கிமிடிஸ், காலத்தில் நடந்ததென்ன? அவன் நாட்டு மன்னன் ஹீரோ என்பவன் தனக்கு ஒரு கிரீடம் செய்துத்தர வேண்டுமென்று அவ்வூர் பொற்கொல்லன் ஒருவனேக் கேட்டிருந்தபடி, அவன் செய்து கொடுத்திருந்தான். அதில் அசல் தங்கத்தோடு