பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உலக விஞ்ஞானிகள்: அணுசக்தி ஆற்றலை வெளிப்படுத்தி, உலகம் ஆக்கவழியில் செல்லவே நான் அதை அளிக்கிறேன்’ என்று தன் வாழ்நாளெல்லாம், அமைதி, அமைதி, உலக சமாதானம்: என்ற கோஷத்தை விடாமல் கூறிவந்த அந்த அறிவுக் குன்று, தனது எழுபத்தாருவது வயது முடிவுற்ற சில நாட்களில் ரத்த நாளம் வெடித்து, 1955, ஏப்ரல் 18ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தது. ஐன்ஸ்டீனின் அணு ஆய்வுத் தத்துவம் உலகம் உள்ளளவும் வளர்ந்து வளருகிற சமுதாயத்திற்கு எவ்வளவோ புதுமைகளைத் தரப்போகிறது, காணப்போகிறது வருகிற உ ல கம், வாழ்க மேதை. ஜன்ஸ்டீனின் புகழ் வளர்க அவரது ஆய்வுத்திறன். முற்றிற்று.