பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உலக


வேறு உலோகம் கலந்திருக்கிறதா, அப்படியால்ை எவ்வளவு கலந்திருக்கிறது என்று கண்டுபிடித்துத் தரும்படி ஆர்க்கி மிடிசைக் கேட்டிருந்தான். இவரும் ஒப்புக்கொண்டு நெடு நாள் சிந்தித்தார்.

ஒரு நாள் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும்போது “யுரீக்கா, யுரீக்கா” ( கண்டு விட்டேன், கண்டுவிட்டேன்.) என்று ஆடைகளே உடுத்தக்கூட மறந்து போய் தெரு வழியே ஓடிவந்தார். “யார் இப்படி ஒரு பைத்தியம் இவ்வாறு ஒடுகிறதே?” என்று யோசித்த மக்கள் கடைசியில், ஒடியவர் அறிஞர் ஆர்க்கிமிடிஸ்தான் என்று கண்டு கொண்டனர்.

நீரில் அவர் மூழ்கியிருந்தபோது உடற்கனம் குறைந்தும், மேலே வந்தபோது கனத்தும் காணப்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது, பத்தொன்பது பாகங்கள் இரண்டுக்கும் எடை மாறுதல் என்று கண்டு பிடித்தார். அதே போல தங்க கிரீடத்தில் பத்தொன்பதுக்கு ஒரு பாகம் தங்கத்தோடு வேறு உலோகம் கலந்திருக்கிறது என்று நிருபித்தார். பொற்கொல்லன் தவறுடையவனே என்றும் நிலநாட்டினர்.

பல பொருட்களே தண்ணிருக்குள் மூழ்கடித்து நிறுத்துப் பார்த்தும், வெளியே எடுத்து நிறுத்துப் பார்த்தும், கடைசியில் தங்கத்தையும் அப்படி தண்ணிருக்குள்ளும் வெளியிலுமாக நிறுத்துப் பார்த்துத் தான் இதைக் கண்டு பிடித்தார். செம்பு, ஈயம், இரும்பு எல்லாவற்றையும் சோதித்தார். அவைகளும் அப்படியேதான் இருந்தன.

ஆர்க்கிமிடிஸ் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். கிரேக்க நாட்டின் சிசிலி என்னும் தீவில் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு இருநூற்று எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அவர் தந்தை பிடியாஸ் என்பவர் வான ஆராய்ச்சியாளராக இருந்தார். எகிப்து நாட்டிலிருந்த அலெக்சான்ட்ரியா என்னும் நகரத்திலிருந்த பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் போதே, அந்த நகரத்தாருக்குக் கிணற்றிலிருந்து தண்ணிர்