V இளம் பிள்ளையாகிய சம்பந்தப் பெருமானுடைய பாட்டிலே இயற்கையின் எழிலெல்லாம் கொஞ்சிக் குலவி நடமிடும். இறைவ னுடைய குண அழகும் கோல் எழிலும் இணைந்து கூத்தாடும். "இளங்கன்று பயம் அறியாது" என்பார்கள். ஞானசம்பந்தரும் பயம் அறியாத கன்று. ஆதலின் இறைவனிடம் முறையிடுவ. தென்பது இவருடைய திருவாக்கில் அரிதாகவே இருக்கும். பன்னிரண்டு திருமுறை முழுவதையும் படித்துப் பொரு ளுணர்ந்து இன்புறல் மிக மிக அருமையான காரியம். எல்லாப் பாடல்களுக்கும் பொருள் தெளிவாக விளங்கும் என்று சொல்ல முடியாது. பழங்காலத்தில் திவ்யப் பிரபந்தத்துக்குச் சில பெரி யார்கள் உரை வகுத்ததுபோல் திருமுறைகளுக்கும் யாரேனும் வகுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இப்போதுள்ள மூலத்தில் எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. பல பாடல் களுக்கு எத்தனைதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் பொருள் விளங்குவதில்லை. . என்றாலும் திருமுறைப் பாடல்கள் தமிழர் பெற்ற அரும் பெருஞ் செல்வம். அவற்றில் நயமான பாடல்களைத் தேர்ந் தெடுத்து எல்லோரும் படித்து இன்புறலாம். சில அன்பர்கள் அந்த வகையில் சில திரட்டுகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு திருமுறையிலும் சில பாடல்களைப் பொறுக்கி அவற்றுக்கு விளக்கம் எழுதலாம் என்று எனக்குத் தோற்றியது. என் கருத்தை அமுதநிலையத் தலைவரும் என் நண்பருமாகிய ஸ்ரீ ரா.ஸ்ரீ,ஸ்ரீகண்டன் அவர்களிடம் சொன்னபோது, உடனே அதுபற்றிய திட்டம் ஒன்றை அவர்கள் வகுத்துவிட்டார்கள். ஒவ் வொரு திருமுறைக்கும் ஒவ்வொரு புத்தகமாக வெளியிடலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார்கள். அவ்வாறே எழுதத் தொடங்கினேன். என்னுடைய ஆசிரியப் பிரானாகிய டாக்டர் ஐயரவர்கள் தேவா ரத்திலும் பிற திருமுறைகளிலும் மிக்க ஈடுபாடுடையவர்கள். தேவார பாராயணத்தை விடாமல் செய்துவந்தார்கள். திரு முறைகளைப் பற்றிய குறிப்புக்கள் பலவற்றைத் தொகுத்துவைத் தார்கள். இலக்கியம், இலக்கணம், தல வரலாறு, சரித்திரம்,
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/8
Appearance