பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

ஆங்கிலேயரும் ஆங்கிருந்த அமெரிக்கரும் போற்றினார்கள். புலவர்கள் சிலரின் விருத்தினராகப் புக்கர் இருந்து வந்தார். பிரிஸ்ட (Bristol) லின்கண் மகளிர் சங்கத்தில் புக்கரும் அவர்தம் மனைவியாரும் பேசி மகிழ்வித்தார்கள். விண்ட்ஸர் மாளிகையில் (Windsor Castle) விக்டோரியா மகாராணியோடு புக்கரும் அவர் மனைவியாரும் ஒரு நாள் விருந்துண்டார்கள். புக்கர் பார்லிமெண்டு அங்கத்தினர் பலரைக் கண்டு உரையாடினர். அமெரிக்கரை விட ஆங்கிலேயர் வாழ்க்கையை முழுதும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும், அவர்களது இல்வாழ்க்கை கடிகாரத்தைப்போல ஒழுங்காக நடைபெறுகிறது என்பதையும், அவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதில் ஆர்வமுடையவர் என்பதையும் புக்கர் கண்டுகொண்டார். அமெரிக்க தேசத்திலே கதை சொல்லிக் கேட்போரை ஆண்டு மகிழச் செய்தது போன்று, ஆங்கிலேயரை மகிழ்விக்க முடியவில்லை. பின்னவர் விவரங்களை அறிந்துகொள்வதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தார்கள். பிர்சங்கங்கள் செய்த பிற்பாடு கப்பலேறிப் புக்கர் ஊர் திரும்புவாராயினார்.

இடையில், அவரைச் சார்லெஸ்டன் என்ற ஊரின் குடிகளும், மேலவர்ஜீனிய மண்டலத்தாரும் தங்கள் ஊருக்கு வந்து போகுமாறு அழைத்தனர். அவரும் இணங்கினார். எவ்வூரின்கண்ணே இளமையைக்