பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

101

கல்லூரியையும் புக்கரையும் பாராட்டினார். தேசத்தின் பல திசைகளிலும் டஸ்கிகீக் கலாசாலையின் இசை எட்டியிருத்தலைக் குறிப்பிட்டார். நீகிரோவர் பெருமையும் நற்பயனும் எய்த அமைக்கப்பட்ட கல்லூரியின் தலைவராகிய புக்கரது மதி நுட்பத்தையும், விடா முயற்சியையும், இடுக்கணழியாமையையும் போற்றினார். எண்பொருளவாகச் செலச் சொல்லிப் பிறர் கூறும் நுண்பொருளைக் காணும் புக்கரது அறிவுடைமையையும், ஆராய்ந்த சொல்வன்மையையும், தாளாண்மையொடு பொருந்திய வேளாண்மையையும் நேரிய முறையிற்பாராட்டினார்.

டஸ்கிகீக் கல்லூரி வாழ்க்கை கீழ்க்காணுமாறு அமைக்கப்பட்டிருந்தது என அறிகிறோம். காலை 5 மணி, எழுதல் ; 6 மணி, காலையுண்டி ; 6-20 முதல் 6-50 வரை, அறைகளைத் தூய்மைப்படுத்தல் ; 6-50 வேலைமணி அடிக்கப்பெறுதல் : 7-30 முதல் 8-20 வரை, காலைப் படிப்பு ; 8-20, காலைப் பள்ளி மணி : 8-25, வரிசை வரிசையாக இளைஞரின் அறையைப் பார்வையிடுதல் ; 8-40, வழிபடு நிலையத்திற் காலை வழிபாடு, 8-55, அன்றன்றைய செய்தியோடு ஐந்து நிமிடம் : 9 முதல் 12 வரை வகுப்பு : 12-15, உண்டி : பிற்பகல் 1 மணி, வேலை, மணியடிக்கப் பெறுதல் ; 1-30 முதல், 3-30 வரை, வகுப்பு: 5-30, வேலையை முடிக்க மணியடிக்கப்