பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இளமையும் இன்னலும்

மகனாய்ப் பிறந்தார். அவர் தகப்பனார் இன்னாரென்பது அவருக்குத் தெரியாது. அவரது வாழ்க்கையின் எந்த நாளிலும் அத்தகப்பனார் புக்கரைப்பற்றி எந்தக் கவலையும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் தாயோ, ஒரு தோட்டத்திற் சமையல் வேலை செய்து பிழைத்தவள். புக்கரோடு பிறந்தவர் இருவர். புக்கர் அவ்விரண்டு உடன் பிறந்தாரோடும் தாயோடும் ஓர் அறையின் தோட்டத்தின்கண்னே வசித்து வந்தார். அவ்வறையின் நீளம் பதினாறு அடி; அகலம் பதினான்கு அடி. மழை வெயிற்காலங்களிலும் அவ்வறையிலேயே அவர்களெல்லாம் இருந்து வந்தார்கள். அவ்வறையின் தரை மண்ணால் ஆன தரை. அத்தரையின்மேல் சில அழுக்குக் கந்தைகளைப் பரப்பி, அவற்றின் மேலேயே அவர்களெல்லாம் படுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்கள். குளிரிலும் பனியிலும் அவர்கள் உற்ற இன்னல் சொல்லுந் தகைத்தன்று. அவ்வறை அத்தோட்டத்தின் சமையலறையாயும் இருந்தபடியால், வெயில் வேளைகளில் அதிலிருந்து தாவின தீ அவர்களை யெல்லாம் வாட்டிற்று. புக்கரின் தாய் தன் ஆண்டானுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுமுன் காலையில் சிறு பொழுதும், செய்த பின் இரவில் சிறு பொழுதும் தன் குழந்தைகளை நினைத்து உண்பிப்பது வழக்கம். ஒரு நள்ளிரவில் அவள் கோழிக் குஞ்சைச் சமைத்து, உறங்கிக்கொண்டிருந்த தன் குழந்தைகளை