பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

நெடுங்காலம் இறைஞ்சி வந்தாள். அவளும் மற்றைய அடிமைகளும் ஆடினார்கள் பாடினார்கள்; வாழ்த்தினார்கள். இந்த மகிழ்ச்சி சற்று நேரங் கழித்து அடங்கத் தொடங்கிற்று. காரணம், குழந்தை குட்டிகளைப் பாதுகாக்க வேண்டுமே, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்து குடி கொள்ளத் தலைப்பட்டதேயாம். வீடு வாசல், வாழ்க்கை முறை, குழந்தை வளர்ப்பு, கல்வி, குடிமை, கோயிலெடுத்தல் முதலான செய்திகள் எல்லாம் அவர்முன் தோன்றின. எழுபது, எண்பது ஆண்டுகள் அடிமைகளாகவே தம் வாழ்நாள் முழுதுங் கழித்த முதியோர் சிலர், மீண்டும் பெரிய வீட்டை நோக்கிச் சென்று, தமது பழைய ஆண்டானிடம் தமது பிற்கால வாழ்க்கையைக் குறித்து மறைவிற் சூழத் தொடங்கினர். கட்டவிழ்த்த மாக்கள் போன்று முதலில் அவர்கள் துள்ளிக் கூத்தாடினர்கள். உண்மையிலேயே தளை போய்விட்டதா என்று ஓடியாடி உணர்ந்து பார்த்தார்கள்: இப்பொழுது விடுதலை தங்களதே எனக் கண்ட பிறகு தங்கள் பொறுப்பை நோக்கிக் கவலையுடன் நினைக்கலுற்றார்கள்.


புக்கரின் சிறிய தந்தையார், ஏதோ ஒரூரில் முன் அடிமையாய் இருந்தவர், இப்பொழுது புக்கரின் தாய் முதலானவர்களைத் தம்மிடத்திற்கு அழைத்தார். எழு-