பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமையும் இன்னலும்

17

கொள்ள அவர் முயன்று வெற்றியுற்றார். இத்திட்டத்திலும் ஓர் இடுக்கண் இருந்தது. பள்ளிக்கூடம் திறப்பதும் ஒன்பது மணிக்கு உலைக்ள வேலை முடிவதும் ஒன்பது மணிக்கு. பள்ளிக்கூடமோ, உலைக்களம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் இல்லை. சில நாட்சென்று, தாம் காலந்தாழ்த்துப் போனதைப் புக்கர் அறிந்தார். இத்தொல்லையினின்று நீங்க அவர் ஒரு சூழ்ச்சி செய்தார். உலைக்கள நிலையத்தில் பெரிய கடிகாரம் ஒன்று உண்டு. நேரத்திற் பள்ளிக்கூடம் சேர வேண்டி, அவர் நாடோறும் காலை எட்டரை மணிக்கெல்லாம் கடிகார முள்ளை ஒன்பதில் வைத்து வரலானார். இங்ஙனம் செய்து வருங்கால் ஒரு நாள் உலைக்களத் தலைவர் ஐயம் கொண்டு கடிகாரத்தைப் பூட்டி வைத்துவிட்டார். முள்ளினைத் திருப்பி வைத்ததனால் எவருக்கும் இன்னல் இழைக்க நினைத்தாரல்லர் புக்கர். அவர் நினைத்த தெல்லாம் நேரத்திற் பள்ளிக்கூடம் சேர வேண்டும் என்பதே; அதற்காகப் பின்னர் வருந்தினார்.

புக்கர் பள்ளிக்கூடம் முதல் முறையாக சென்றதும் மாணவரெல்லாம் தலையில் தொப்பி போட்டிருந்ததைக் கண்டார். புக்கருக்கோ, தொப்பியுமில்லை : தலைப்பாகையுமில்லை. அவர் சில நாள் வெறுந்தலையுடன் சென்றார். எல்லாப் பிள்ளைகளும் தலையை மூடிக்கொண்டிருப்பதைக் கண்ட அவர், தாயிடம்

2