பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

வந்து, தம் குறையை முறையிட்டார். கேட்ட தாய், கடன் வாங்க மனமில்லை எனக் கூறித் தன்னிடம் உள்ள இரண்டு துணித் துண்டுகளைக் கொண்டு தொப்பி போன்றது ஒன்றைத் தைத்துக் கொடுத்தாள். அதையணிந்து புக்கர் பள்ளிக்குச் செல்லலனார். அவரை மாணவர் சிலர் ஏளனஞ் செய்தனர். அவர் தாய் தன்னல் வாங்க இயலாத காலையில் ஒரு தொப்பி வாங்க இசைந்தவள் போலக் காட்டாதிருந்தது அவளது அருங்குண பலத்தைக் காட்டுகிறது. பின்னால் வித விதமான குல்லாய்களும் தொப்பிகளும் புக்கருக்குக் கிடைத்திருந்தாலும், தாய் செய்து தந்த அத்துணிக் குல்லாய்க்கு அவை ஈடாகா என அவர் நினைத்திருந்தார். அவரை ஏளனஞ் செய்த சிலர், முன்னால் நல்ல தொப்பி போட்டிருந்தும், பின்னாளில் யாதொரு தொப்பியும் வாங்கக் காசற்றவராய்க் கழிய, வேறு சிலர் தம் வாழ்க்கையைச் சிறைச்சாலையிற் கழிக்க வேண்டியவர் ஆயினர். இதை நினைக்கும் பொழுது புக்கருடைய தாயின் உளவரை தூக்கிய ஒப்புரவாண்மை போற்றப்படுதல் ஒருதலை.

புக்கரின் இன்னொரு தொல்லை அவரது பேரைக் குறித்தது. அக்கால, அப்பள்ளியிற்சேர்ந்த மாணவரெல்லாரும் குறைந்தது இரண்டு பெயர் தாங்கியிருந்தனர். புக்கரின் பெயர் எழுதப்படும் நேரம் வந்ததும்,