பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமையும் இன்னலும்

19

இரண்டு பெயர் வேண்டுமே எனக் கருதிப் புக்கர் மெல்லிய குரலில் புக்கர் தி வாஷிங்குடன் (Booker T. Washington) எனக் கூறிவிட்டார். அப்பெயராலே தான் அவர் இந்நாள்காறும் அறியப்பட்டு வருகிறார். புக்கர் தமக்குத் தாமே பெயர் இட்டுக்கொண்ட விதமாகத் தமக்குப் பெயரிட்டுக்கொண்ட பிறர் அத்தேசத்திற் பலரல்லர் என்று சொல்லலாம்.

புக்கர் வாஷிங்குடன் படித்து வரத் தொடங்கிய சில மாதத்துக்கு அப்பால் அப்பள்ளிக்கூடத்தை அவர் விட்டுவிட நேரிட்டது. அவரது பகல் நேரம் முழுதும் உப்புக்கள வேலையிற் செலவிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. யாது செய்வார் வாஷிங்குடன் இரவிலாகிலும் எப்படியாவது படித்தே முடிப்பது என்று அவர் உறுதி செய்துகொண்டார். அதன்படி பகல் வேலை முடிந்ததும், கணக்காயர் ஒருவரிடம் கற்று வரலானார். பல கல் எல்லையைக் கடந்து சென்று தம் பாடங்களை இரவில் அவர் ஒப்பித்து வருவார். இதனிடையே உப்புக்களத்தில் வேலை பார்த்து வந்த அவரை நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும்படி பணித்தார்கள். அச்சுரங்க வேலை எளிதன்று. அவ்வேலை செய்பவர் உடலேத் தூய்மையதாக வைத்துக் கொள்ள முடியாது. வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னும் உடம்பின் அழுக்கைப் போக்க முடியாதென்-