பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

றால், அக்கறையின் தன்மையை என்னென்பது சுரங்க வாயிலிலிருந்து கரியுள்ள இடம் சேர ஒருமைல் தூரம் உள்ளே இருட்டிற் செல்ல வேண்டும். உள்ளே பல அறைகள் இருந்தன. ஓரறைக்குப் போக வேண்டிய வாஷிங்குடன் வழி தப்பி வேறோர் அறைக்குப்போய்த் தவித்த சமயம் பல. கையிலுள்ள விளக்கு அவிந்து போய், நெருப்புக் குச்சியும் அற்றுத் தவித்த சமயம் பல. அவ்வேலை கடினமானது என்பது மாத்திரமன்று; அஃது அபாயகரமானதும் ஆகும். வேலை செய்துகொண்டிருக்குங்காலே திடீரென்று எங்கேனும் வெடித்து ஆட்கள் தூளாக்கப்படுவர். இத்தகைய சுரங்க வேலையைச் சின்னாள் வாஷிங்குடன் செய்து வருவாராயினர்.

அவரைப் போன்று அவ்வேலையை அங்குச் செய்த மாந்தர் பலர். சிறு மகாரையும் அவ்வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி அவர்களது ஆயுளையே ஆங்குக் கழிக்கும்படி செய்து, கல்வியின் வாசனை அறிய ஒரு வாய்ப்புங் கொடாதிருந்தனர் என்பதைக் கண்ட வாஷிங்குடன் நெஞ்சு புண்ணாயிற்று. இதைக்குறித்து அவர் அடிக்கடி எண்ணியெண்ணிப் புண்ணுற்றார். நிலக்கரிச் சுரங்கத்து வேலையில் வாழ்க்கையைத் தொடங்கும் இளஞ்சிறுவர்கள், உடல் நிலையிலும் மனநிலையி லும் குறுமையை அடைகிறார்கள். சுரங்க வேலையையே செய்வது என்பதைத் தவிர்த்து வேறொரு குறிக்கோள்