பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமையும் இன்னலும்

21

அவர்களுக்குத் தோன்றுவதில்லை. தனது குறிக்கோள்களைப் பொறுத்தும், முயற்சிகளைப் பொறுத்தும் யாதோர் எல்லையும் வகுக்கப்படாது செல்ல விடப்படுகின்ற வெள்ளைச் சிறுவன் சட்டசபை அங்கத்தினராகவோ, கவர்னராகவோ, அத்தியக குருவாகவோ, பிரஸிடெண்டாகவோ நினைக்கும் ஒரு வெள்ளைச் சிறுவன் வழியிலே சாதி பிறப்புக்களால் ஆன முட்டுக் கட்டைகள் இல்லை. அம்முட்டுக்கட்டைகள் நீகிரோ வர்க்கம் இல்லையானால், அடியிலிருந்து தொடங்கி உயர்ந்துகொண்டே சென்று முடியை அவர் அடைய மாட்டாரா? செயற்கருஞ்செயல்களைப் புரிந்து அவற்றால் தமக்கு ஒரு பேருண்டாக்கி, அப்பேரால் தம் சந்ததியாரைப் பெருமிதம் அடையவும், பேரூக்கம் அடையவும் செய்யவேண்டும் என்ற எண்ணம் புக்கருக்குத் தோன்றிற்று.

நீகிரோச் சிறுவனக் குறித்து வெகு விரைவிலும், வெகு கடினமாகவும் உலகம் திர்ப்புக் கூறக் கூடாது. வேறு சிலருக்கு இல்லாத பல இடர்பாடுகள், மயக்கங்கள், அதைரிய போதனைகள் இவற்றினெதிரே அவன் போர் புரிய வேண்டிய நிலையில் இருக்கிறான். வெள்ளைச் சிறுவன் ஒரு செயலை மேற்கொண்டால், அவன் வெற்றியுற முடிப்பான் என்று உலகு உடனே எண்ணி விடுகிறது. ஆனால், நீகிரோச் சிறுவன் தோல்வியுறா-