பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

விட்டால் உலகு வியப்புறுகிறது! அவன் தொடங்கும் பொழுதே வெற்றியுற மாட்டான் என்ற ஒருணர்ச்சி எப்படியோ பிற மக்கள்பால் வலுத்துப்போயிருக்கிறது. வெள்ளைச் சிறுவன் வெற்றியடையாவிட்டால், அவனது பெருங்குடிப்பெயர் வடுப்படுமே என்றதோர் உணர்ச்சி, அவன் மயக்கவுணர்வினின்று விடுபடப் பேருதவியாய் இருக்கிறது. தன் முன்னாலும் தன்னைச் சுற்றியும் உள்ள குடிப்பெருமையும் குடி வரலாறும் அவன் இடர்களைப் பொடிபடுத்த உதவும் கருவிகளாய் உள்ளன. இங்ஙணம் எண்ணினர் புக்கர்; வெற்றி எனப்படுவது, அடைந்துள்ள ஓர் உயர்பதவியால் அளக்கப்படுவதன்று என்பதைப் பின்னாளில் அறிந்தார். முயன்றவன் எவ்வளவு இடுக்கணப் பொடியாக்கி, எத்துணை முட்டுக் கட்டைகளைத் தகர்த்தெறிந்தான் என்பதைக்கொண்டே வெற்றி எனப்படுவது உறுதி செய்யப்படும் என்பதையும் அறிந்தார். இம்முறையே நோக்கினால், நீகிரோச் சிறுவனது பிறப்பு அவனுக்கு நலம் பயப்பது என்றே சொல்ல வேண்டும். தான் மதிக்கப்படும்பொருட்டு அச் சிறுவன் வெள்ளையனேவிட நன்றாகவும் திருத்தமாகவும் தன் வேலைகளைச் செய்தாக வேண்டும். கடினமான போரிடையே அவன் செல்லவேண்டியிருப்பதால், பிறர் சிலர்பால் காணப்படாத பலமும் நம்பிக்கையும் அவனுக்கு உண்டாகின்றன. ஆதலின், உழைப்பும் முயற்சியும் நலம் பயக்குமன்றிப் பிறப்புப் பயவாதென்பதைப்