பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

அல்லும் பகலும் நினைத்து வந்தார்.

இப்படியிருக்குங் காலத்திலே அவர் சுரங்க வேலையை விட்டு நீங்கற்குரிய காலம் வந்தது. தம் தாயின் செல்வாக்கின்பேரில் ரப்னர் (Mrs. Rufiner) என்ற பெண்மணியிடத்தில் மாதம் ஐந்து டாலர் சம்பளத்தில் ஆளாய் அமர்ந்தார் வாஷிங்குடன். அம்மாதரசியிடம் வேலை பார்ப்பது மிகமிகக் கடினமானது என்று ஊரெல்லாம் பேச்சு எட்டியிருந்தது. அஞ்சா நெஞ்சுடன் வாஷிங்குடன் அம்மகளிடத்து வேலைக்கு அமர்ந்தார். அமர்ந்து சில நாள் ஆனதும், அவ்வம்மை முதன்மையாக வேண்டுவது சுற்றுமுற்றும் துப்புரவாக வைத்திருத்தல் என்றும், வேலைகள் எல்லாம் நேரத்திற் செவ்வனே செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை அவ்வம்மாளிடம் குடிகொண்டிருந்தது என்றும், நேர்மையான ஒழுக்கமும் சிறந்த மனமுமே வேலையாட்களிடம் அவ்வம்மை எதிர்பார்த்தவையென்றும் வாஷிங்குடன் கண்டுகொண்டார். அவ்வாறே ஒழுகி, தமது ஊக்கத்தாலும் ஒழுக்கத்தாலும் நல்ல பெயர் எடுத்தார். இப்பொழுது நாடோறும் இரண்டொரு மணி நேரம் பள்ளி சென்று பயின்று வருவதற்குக்கூட இசைவு பெற்று விட்டார் அவ்வெசமாட்டியிடம் : ஒரு சிறு புத்தக சாலையுந் தமக்குச் சொந்தமாக அமைத்துக்கொண்டுவிட்டார். கிடைத்த கிடைத்த புத்தகத்தையெல்லாம் ஒரு