பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

இவ்வாறு எத்துணை படித்தும் வாஷிங்குடனுக்கு ஹேம்புடன் செல்லாமல் மனவமைதி உண்டாகவில்லை. இறுதியில் 1872-ஆம் ஆண்டில், அதாவது அவருடைய பதினான்காவது வயதில், வாஷிங்குடன் ஹேம்புடன் போகப் புறப்பட்டார். தம் கையில் வேண்டிய காசு இல்லாதபடியால், தாயின் அரைகுறை இணக்கமே அவருக்குக் கிடைத்தது. அவர் தமது குறைந்த கூலியிலிருந்து குடும்பத்திற்காகக் கொடுத்தது போக எஞ்சி நின்றது அற்பமே. அவருடன் பிறந்த ஜான் (John) என்பார், தமது ஊதியத்திலிருந்து சிறிதே கொடுக்கக்கூடியவரா யிருந்தார். எனினும், புறப்பாடு உறுதி செய்யப்பட்டு விட்டது. புறப்படும் நேரமும் வந்துவிட்டது. அவ் வேளையிற் பார்க்க வேண்டுமே அவ்வூர் நீகிரோக்களே! எத்துணை ஆண்டுகள் அடிமைகளாய்ப் படிப்பு வாசனை அறியாது இருந்தவர்கள் அவர்கள் எல்லாம் இப்படித் தம் வகுப்பினருள் ஒருவன் படிக்கவும் ஊர் விட்டுப் பிரிவான் என்று கனவிலும் நினையாத அம்முதியார் பலர்க்கு அக்கால இருந்த கிளர்ச்சியும் மலர்ச்சியும் சொல்ல ஒண்ணா. அவர்களெல்லாம் வாஷிங்குடனுக்கு ஒன்று, அரை, கால் என்று நீக்கல் நாணயங்களையோ, கைக்குட்டைகளையோ கொடுக்கலானார்கள். ஒரு சிறு