பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

ஏற இறங்கப் பார்த்தார் அவ்வம்மையார். வாஷிங்குடனைச் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லவில்லை ; சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் கூறவில்லை. இதற்கிடையில், வேறு சிலரை மாணவராக அவ்வம்மையார் சேர்த்துக்கொண்டதைக் கண்ட வாஷிங்குடனுக்கு மனம் எப்படியிருந்திருக்கும்! “ஐயோ! சமயம் மாத்திரம் வாய்த்தால், அவர்கள் அளவு நானும் பெயர் சொல்ல மாட்டேனா?" என்று நினைத்துப் புழுங்கிய மனத்துடனே அருகே நின்றபடியே இருந்தார். அவரைச் சேர்த்துக்கொள்வதில் அவ்வாசிரியை காலந்தாழ்த்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. வாஷிங்குடன் முகத்தில் அப்பொழுது களை என்பதே இல்லை: படிக்கக் கூடியவர் என்பதே தோன்றவில்லை. இவற்றிற்கெல்லாங்காரணம் அவர் பல நாட்பசியினால் மெலிவெய்தியிருந்தமை என்றும், பன்னாள் நீராடாது இருந்தமை என்றும், அழுக்குப் பிடித்த ஆடையை உடுத்திருக்க நேர்ந்தமை என்றும் அவ்வம்மையார் அறிந்திருந்தாலன்றோ ஐயப்படமாட்டார்! இது நிற்க. அவரைச் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. வியப்பு என்ன என்றால், அவரை எழுதப் படிக்கச் சொல்லியோ எண்ணச் சொல்லியோ தேர்ந்தாரல்லர் : அலகினைக் கொடுத்துப் பெருக்கச் சொன்னார் அவ்வம்மையார். அவ்வேலை அவருக்கு நன்றாய்த் தெரியுமாதலின், குதித்துக்கொண்டெழுந்தார் வாஷிங்-