பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

31

hwe|டன்.|வாஷிங்டன்}} முன்பு அடிமையாய் இருந்த நாளில் ரப்னரிடம் (Mrs. Ruffner) அதனை அவர் நன்றாகப் பயின்றிருந்தார். அதனால், அந்நேரம் அவருக்கு நேர்ந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தமக்குத் தெரிந்த வேலையைத்தானே செய்யும்படி கட்டளை பிறந்ததெனப் பேருவகை எய்தினார் புக்கர். அறையுட்சென்றார் ; பெருக்கினார் தரையை மும்முறை; பிறகு, துணியொன்றை வாங்கித் துடைத்தார் நான்கு முறை : சுவரிலிருந்த மரப்பாகங்களையெல்லாம் பன்முறை துடைத்தார் : மேசை, நாற்காலி முதலியவற்றையும் துடைத்தார். அறையிற் சுத்தமடையாத மூலை முடுக்குக்கூட இல்லை. வந்து பார்த்தார் அம்மணியார் : தரையைப் பார்த்தார் ; மூலையைப் பார்த்தார்'; கையில் வெள்ளைக் குட்டையை எடுத்துக்கொண்டு சுவரிலுள்ள மரத்தைத் தடவிப் பார்த்தார். எத்துணை பார்த்தும் யாது பயன் ? ஒரு சிறு புழுதியைக்கூட அவராற் கண்டுபிடிக்க முடிய வில்லை. “நீ இப்பள்ளிக்கூடத்திற் சேரலாம்," என்று மிகச் சாந்தமாகக் கூறினார். புக்கரின் மகிழ்ச்சியைக் குறித்து எழுத இயலாது.

அவர் துடைப்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றது அவருக்கு மிக்க நலம் பயந்தது. விரைவில் அவருக்கு அப்பள்ளிக்கூடத்திலேயே வேலையாள் நிலை கிடைத்தது. அதனால், அவர்தம் முழு உணவுக்கு வழி கிட்-