பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

டிற்று. வேலைக்குப் பதிலாகக் காசின்றி உண்டி கிடைத்தது. வேலை மாத்திரம் கடுமையானதுதான். இரவில் வெகுநேரம் விழித்திருந்து, காலையில் வெகு விரைவில் எழுந்து அவ்வேலையைப் பார்க்கவேண்டி இருந்தபோதிலும், புக்கர் தமது வறுமைக்கொடுமையால் அதனை உவகையுடன் ஏற்றுக்கொண்டார். ஹேம்புடன் பள்ளிக் கூடத்தில் ஆண்டுக்கு எழுபது டாலர் வீதம் புக்கர் சம்பளங்கட்ட வேண்டியவராய் இருந்தார். அதற்கு என் செய்வார்! ஆர்ம்ஸ்டிராங்கு (Armstrong) என்ற பெரியவர், மார்கன் (Morgan) என்பாரிடம் சொல்லி அன்னாரைப் புக்கருக்காகச் சம்பளஞ் செலுத்தும்படி ஏற்பாடு செய்தார். மெய்ப்பை ஒன்றே உடைய புக்கர் அதனையே வேலை செய்யுங்காலும் படிக்குங்காலும் மற்ற நேரத்திலும் அணிந்திருக்க வேண்டியிருந்ததோடன்றி, அதில் யாதொரு மாசுமின்றித் தூய்தாக, வைத்திருக்கக் கடமைப்பட்டவராயும் இருந்தார். அவர் உண்மையிலேயே படிக்க முயலும் ஓர் அரிய உழைப்பாளர் என்பதைக் கண்ட சில ஆசிரியர்கள், அவருக்குச் சில பழைய துணிமணிகளைக் கொடுப்பாராயினர். அவையெல்லாம் வடவமெரிக்காவிலுள்ள சில வேளாளரிடமிருந்து வந்தவை, அத்துணிமணிகள் இல்லையேல், நூற்றுக்கணக் கான எளிய தகுந்த மாணவர்கள் தங்கள் தங்கள் படிப்பை முற்றுவித்துக்கொண்டிருக்க முடியாது.