பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேம்புடன் பள்ளியிற்கல்வி

33

என்பது உறுதி.

அதுவரையில், புக்கர் இரண்டு விரிப்பு உள்ள படுக்கையிற் படுத்தறியார். ஹேம்புடன் மாணவரில்லத்தில் ஒவ்வோர் அறையிலும் ஏழெட்டு மாணவர் தங்கும்படி விதிக்கப்பட்டிருந்தது. மாணவர் ஒவ்வொருவருக்கும் இரண்டு விரிப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. புக்கர் முதல் நாள் விரிப்புக்களின் அடியிற் படுத்துக்கொண்டார் : மறு நாள் இரண்டையும் விரித்து மேலே படுத்துக்கொண்டார்; மூன்றாம் நாளே மற்ற மாணவர்களை நோக்கி, ஒரு விரிப்பின் மேலே படுத்துக்கொண்டு மற்றொன்றினாற் போர்த்திக்கொள்ள வேண்டுமென்பதை அறிந்தார். ஹேம்புடன் பள்ளி வாழ்க்கையாற் புக்கர் பல செய்திகளை அறிந்து கொண்டார். நாடோறும் நீராடுவதால் உண்டாகும் நலனையும், நேரத்தில் உண்பதால் உண்டாகும் உரனையும், பல் துலக்கக் குச்சியை ஆள்வதால் உண்டாகும் விழுப்பத்தையும் உணர்ந்து கொண்டார். அப்பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வந்து சேர்ந்திருந்த மாணவருட்பலர் வயது முதிர்ந்தவர். நாற்பது வயதுள்ள ஆடவரும் பெண்டிரும் நானூற்றுவர்க்கு மேல் இருந்தனர். அவர்களது ஆர்வத்தை என் சொல்வது! படிப்பிலாகிலும் வேலையிலாகிலும் எப்பொழுதும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிற் பலர் உலகத்திற் பல காலம் பழகியிருந்தவர். ஆதலால்,

3